பெண்களை சீண்டுபவர்களின் கைகளை வெட்டுவேன் - அமைச்சர் மகன் ஆவேசம்

செவ்வாய், 22 மே 2018 (10:05 IST)
பெண்கள் மற்றும் குழந்தைகளை சீண்டுபவர்களின் கைகளை வெட்டுவேன் என அமைச்சர் மகன் ஆவேசமாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்திரபிரதேசத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ வாக இருப்பவர் ஓம் பிரகாஷ் ராஜ்பூர். இவரது கட்சிப் பெயர் சுகள்தேவ் பாரத் சமாஜ். இவர் ஒரு தீவிர மோடி ஆதரவாளர். 
 
இந்நிலையில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியுள்ள ஓம் பிரகாஷ் ராஜ்பூரின் மகன், நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் ரீதியில் துன்புறுத்துவர்களின் கைகளை வெட்டுவேன் எனக் கூறினார். 
 
பாலியல் குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை வழங்கினால் ஒழிய இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது என அவர் ஆவேசமாக பேசினார். இதனால் கூட்டத்தில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்