தன்னை விட மனைவி நல்ல வேலையில் இருந்ததால், மனைவியை அடித்துக் கொன்ற கணவன்

சனி, 13 ஜனவரி 2018 (14:58 IST)
உத்திர பிரதேச மாநிலத்தில் தன்னை விட மனைவி நல்ல வேலையில் இருந்ததால், பொறாமையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர் குல்தீப் ராகவ். இவரது மனைவி ரிச்சா சிசோடியா. இவர்களுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ரிச்சா தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். சரியான வேலை கிடைக்காத குல்தீப், மளிகைக் கடையில் உதவியாளராக பணி புரிந்து வந்தார். மனைவி நல்ல வேலையில் இருப்பதால், அவர் மீது பொறாமை கொண்ட குல்தீப், ரிச்சாவிடம் தேவையில்லாமல் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று கணவன் மனைவிக்கிடையே சண்டை முற்றிப்போகவே குல்தீப் ரிச்சாவை கடுமையாக தாக்கியுள்ளார்.
 
இதனால் படுகாயமடைந்த ரிச்சா பரிதாபமாக உயிரிழந்தார். விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் ரிச்சாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீஸார் குல்தீப்பை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்