டெல்லியை சேர்ந்தவர் தர்மேந்திர சர்மா, இவருக்கும் அகமதாபத்தை சேர்ந்த பிரியங்கா திவாரி என்ற பெண்னுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்ததும் பெண் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், திருமண அலுப்பின் காரணமாக பிரியங்கா முதலிரவன்று உடலுறவுக்கு மறுத்துள்ளார். அப்போது அமைதியாக இருந்தவிட்ட கணவன், சில நாட்களுக்கு பின்னர் அவர்கள் டெல்லிக்கு வந்ததும் முதலிரவன்று உடலுறவுக்கு மறுத்த காரணத்தால் மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
புது மருமகளை காப்பாற்ற முயற்சித்தும் தர்மேந்திராவின் பெற்றோர்களால் எதுவும் செய்யமுடியவில்லை. இதன் பின்னர், பிரியங்கா அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் கணவன் அடித்ததாக கூறி புகார் அளித்ததன் பெயரில், தர்மேந்திரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளான்.