இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் ஆதார் அட்டை பெற்ற தீரவேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. ரேசன் கார்டு பெறுவது முதல் திருப்பதி கோவிலில் சாமி கும்பிடுவது வரை அனைத்து செயல்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்று மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டு வருகின்றன.
நமது அண்டை நாடுகளான நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுக்கு செல்லும்போது விசாவுக்கு பதிலாக தேர்தல் கமிஷனின் வாக்காளர் அட்டையாள உள்பட ஒருசில ஆவணங்களை எடுத்து செல்லலாம். ஆனால் ஆதார் அட்டையை மேற்கண்ட இரு நாடுகளுக்கும் அடையாள அட்டையாக எடுத்து செல்ல முடியாது என்று மத்திய அரசு தெளிவாக கூறியுள்ளது.