இந்திய- பாகிஸ்தான் எல்லை மூவர்ணக்கொடியில் ஹிட்டன் கேமரா: கதிகலங்கும் பாகிஸ்தான்!!

புதன், 8 மார்ச் 2017 (12:53 IST)
பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் இந்திய- பாகிஸ்தான் எல்லையில், நாட்டிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படும் மூவர்ணக்கொடி ஏற்றிவைக்கப்பட்டுள்ளது. 


 
 
இதுவரை, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 91.44 மீட்டர் உயரமுள்ள கம்பத்தில் பறக்கும் தேசியக் கொடியே, மிக உயரமான கம்பத்தில் பறக்கும் கொடியாகக் கருதப்பட்டது. 
 
ஆனால், தற்போது 120 அடி நீளமும், 80 அடி அகலமும் கொண்ட தேசியக்கொடியை பஞ்சாப் மாநில அமைச்சர் அனில் ஜோஷி ஞாயிற்றுக்கிழமை ஏற்றி வைத்தார். 
 
அட்டாரி எல்லையில் நடைபெறும் இந்திய- பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் அணிவகுப்பைக் காணவரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், பஞ்சாப் அரசின் சார்பில் ரூ.3.50 கோடி செலவில் இந்தக் கொடிக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய மூவர்ணக்கொடியில் கேமரா மறைத்து வைக்கப்பட்டு உள்ளது என பாகிஸ்தான் அச்சம் அடைந்து உள்ளது. மேலும், சர்வதேச எல்லையில் உளவு பணிக்காக இந்திய எல்லைப் பாதுகாப்பு படை மூவர்ணக்கொடியை பயன்படுத்தலாம் என பாகிஸ்தான் கவலை அடைந்து உள்ளது. 
 
ஆனால் மூவர்ணக்கொடியில் கேமரா எதுவும் மறைத்து வைக்கப்படவில்லை என இந்திய எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி கூறி உள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்