கர்நாடகாவில் கனமழை; தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா?

செவ்வாய், 9 மே 2017 (19:25 IST)
கர்நாடகா மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. காவிரியில் நீர் வரத்து அதிகரித்தால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது.


 

 
கர்நாடகா மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் குடகு மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த மழை தொடர்ந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
 
உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைப்பெற்றது. 
 
தமிழகத்திற்கு இந்த முறையாவது கர்நாடகா அரசு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுமா என்பது கேள்வி குறியாகவே உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்