பெண்கள் ஜீன்ஸ் மற்றும் செல்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்

புதன், 18 ஏப்ரல் 2018 (18:00 IST)
அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள பெண்கள் ஜீன்ஸ் மற்றும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
அரியானா மாநிலத்தில் இசிபூர் கேடி என்ற கிராமம் உள்ளது. இங்கு பெண்கள் ஜீன்ஸ் மற்றும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து பஞ்சாயத்து தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
 
இதற்கு அங்கிருக்கும் பெண்கள், ஆண்களின் தவறான பார்வையில் தான் பிரச்சனை உள்ளது. பெண்கள் அணியும் உடையில் எந்த விதமான பிரச்சனையும் இல்லை என கூறினார்கள். மேலும், செல்போன் பயன்படுத்துவதில் என்ன தவறு என்றும் கேட்டனர்.
 
ஆனால், பஞ்சாயத்து தலைவர்  பெண்களின் நலனிற்காக தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார். பெண்களுக்கு எதிரான இந்த விவகாரம் அரியானா மாநிலத்திலும் மட்டும் அல்லாமல், இந்தியாவையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்