மோடியை உதாரணம் காட்டியே இம்ரான்கான் வெற்றி: எச்.ராசா ட்விட்!

வெள்ளி, 27 ஜூலை 2018 (16:12 IST)
பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் அன்று இரவே வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கப்பட்டது. இதில் ஆரம்பத்தில் இருந்தே பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகித்து வந்தது.
 
மொத்தம் உள்ள 272 தொகுதிகளில், தனிப்பெரும்பான்மை பெற 137 இடங்களை வெல்ல வேண்டும். இந்நிலையில் இந்த தேர்தலில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாஃப் கட்சி தலைவருமான இம்ரான் கான் 119 இடங்களை கைப்பற்றி முன்னிலை வகிக்கின்றார். 
 
எனவே, இவர் அடுத்த பிரதமர் ஆக அதிக வாய்ப்புள்ளதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், இவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக எச்.ராஜா ட்விட் செய்துள்ளார். 
 
அந்த ட்விட்டில், பாகிஸ்தான் தேர்தலின் போது இந்தியாவில் மோடி அவர்களின் ஆட்சி போல் இங்கு ஆட்சி தருவேன் என்று பிரச்சாரம் செய்த திரு.இம்ரான் கான் முன்னணி என பதிவிட்டுள்ளார். 
 
இதற்கு சிலர் தமிழநாட்ல நோட்டோவை ஜெயிக்க பாருயா அப்புறம் உலக அரசியல அனலைஸ் பண்ணலாம்... எனவும், காமெடி பண்ணாதீங்க எனவும் எச்.ராஜாவை கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்