கொரோனா நோயாளிகளுக்கு உணவு கொடுக்க ரோபோக்கள் – ஐஐடி தீவிரம்!

வியாழன், 2 ஏப்ரல் 2020 (08:15 IST)
நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு உணவு, மருந்து அளிக்க ரோபோக்களை உருவாக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது கவுகாத்தி ஐஐடி.

நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1500ஐ நெருங்கி இருக்கிறது. கேரளா உள்ளிட்ட பல இடங்களில் மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கே கொரோனா ஏற்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்கு ரோபோவை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கவுகாத்தி ஐஐடி மாணவர்கள் இதற்காக இரண்டு ரோபோக்களை உருவாக்கி வருகின்றனர். ஒன்று கொரோனா நோயாளிகளுக்கு மருந்து மற்றும் உணவு பொருட்களை வழங்கவும், மற்றொன்று கொரோனா வார்டை சுத்தம் செய்தல் போன்ற பணிகளுக்கும் தயார் செய்யப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு வாரங்களில் இந்த ரோபோக்கள் முழுமையாக உருவாக்கப்பட்டுவிடும் என கூறப்பட்டுள்ளது. பிறகு சோதனைகளை முடித்துக்கொண்டு மருத்துவமனைகளில் இவை பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்