கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இந்தியாவில் குரோனாவால் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த தமிழகம், நேற்று நேற்று ஒரே நாளில் மூன்றாவது இடத்தை பிடித்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவில் தற்போது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டெல்லியில் நடந்த மத வழிபாட்டில் கலந்து கொண்டவர்களால் ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து உள்ளது. இதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
டெல்லியில் நடந்த மத வழிபாட்டில் கலந்து கொண்டவர்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 132 பேர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அதற்கு அடுத்ததாக தமிழகத்தில் 125 பேர்களுக்கும் மகாராஷ்டிராவில் 115 பேர்களுக்கும் புதியதாக கொரோனா வைரஸ் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்தநிலையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 302 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து கேரளாவில் 265 பேர்களுக்கும் தமிழகத்தில் 234 பேர்களுக்கும் கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நேற்று மட்டுமே 110 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அவர்கள் அனைவருமே டெல்லியிலிருந்து திரும்பி வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது