அனந்திபென் பட்டேல் ராஜினாமா: புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க பாஜக ஆட்சிமன்ற குழு தீவிரம்!

செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (08:15 IST)
குஜராத் முதல்வராக இருந்த அனந்திபென் பட்டேல் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க பாஜக ஆட்சிமன்ற குழு முடிவெடுக்க உள்ளது.


 
 
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர், அவருக்கு பதிலாக குஜராத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அனந்திபென் பட்டேல். இவர் மீது சமீப காலமாக பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்த நிலையில் தற்போது ராஜினாமா செய்துள்ளார்.
 
இது தொடர்பான கடிதத்தை அவர் பாஜக தலைமைக்கு அனுப்பியதாகவும், பாஜக தலைமை அதை ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று கூடும் பாஜக ஆட்சிமன்ற குழுவில் குஜராத்தின் புதிய முதல்வர் யார் என்பது பரிசீலிக்கப்படும்.
 
தனது ராஜினாமா குறித்து கூறிய அனந்திபென் பட்டேல் தனக்கு 75 வயது ஆகிவிட்டதால் இளைஞர்களுக்கு வழி விட விரும்புகிறேன் என்றும் வயது முதிர்வு காரணமாக முதல்வர் பதவியை ராஜினாம செய்ய போவதாக கூறியிருந்தார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்