நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் கருப்பு பணம், கள்ளப்பணம் போன்றவற்றை ஒழிக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் 500, 1000 ரூபாய் நோட்டுகளாகவே இருப்பதால் அவற்றை முடக்குவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டை வங்கியில் கொடுத்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டது. இதனால் அரசுக்கு வரி கட்டாமல், சரியாக கணக்கு காட்டாமல் கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் சிக்கி வருகின்றனர்.
வருமானத்துக்கு அதிகமாக டெபாசிட் செய்பவர்களுக்கு வரியில் 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டது. இதன்படி வைர வியாபாரி லால்ஜிபாய் ஒப்படைத்த 6000 கோடி ரூபாய்க்கு வரியாக ரூ.1800 கோடியும், 200 சதவீத அபராதமாக 3600 கோடியும் சேர்த்து மொத்தம் 5400 கோடி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.