நீங்கள் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்பவரா? அப்படியெனில் உடனே இதை படிக்கவும்

வியாழன், 23 ஜனவரி 2020 (20:20 IST)
ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு வசதியாக இதனை மூன்றாக பிரித்து நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதால் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு எளிதாகியுள்ளது.
 
ஒவ்வொரு மாதமும் 20ஆம் தேதி ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் வர்த்தகர்கள், தொழில் அதிபர்கள் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாளில் ஆன்லைனில் முயற்சிப்பதால் நெட்வொர்க் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு வரி செலுத்துபவர்கள் பாதிக்கப்படுகின்றனர். 
 
இந்த நிலையில் கடைசி நேர பரபரப்பை தவிர்க்க தற்போது ஜிஎஸ்டி வரி செலுத்துவோரை மூன்றாக பிரித்து கணக்கு தாக்கல் செய்வதற்கு 3 இறுதி நாட்களை நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
 
இதன்படி ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் வர்த்தகம் செய்பவர்கள் 20-ந் தேதிக்குள்ளும், 5 கோடி ரூபாய்க்கு குறைவாக வர்த்தகம் செய்பவர்கள் தமிழ்நாடு, புதுச்சேரி, மராட்டியம், கர்நாடகம் உள்ளிட்ட 15 மாநிலங்களை சேர்ந்தவர்கள் 22-ந் தேதிக்குள்ளும், மற்றா 22 மாநிலங்களை சேர்ந்தவர்கள் 24-ந் தேதிக்குள்ளும் கணக்கு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நெட்வொர்க் பிரச்சனை இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்