இஸ்ரோவால் நாளை விண்ணில் செலுத்துவதாக திட்டமிட்டருந்த, கண்காணிப்பு செய்ற்கைக்கோளை ஏந்தி செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எஃப்-10 , தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக புவியை கண்காணிக்கவும், வானிலை ஆய்வுகளுக்காகவும் உதவும் வகையில் ஜி-சாட்-1 செயற்கைக்கோள், வருகிற மார்ச் 5 ஆம் தேதி, மாலை 5.43 மணிக்கு, ஜிஎஸ்எல்வி.-எஃப்10 ராக்கெட் மூலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக இஸ்ரோ அறிவித்தது.