சற்று நேரத்தில் திருமணம் நடக்க இருந்த நிலையில், அந்த திருமணத்தில் விருப்பமில்லாத பெண் வீட்டார், மணமகனை கொலை செய்த விவகாரம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், அதற்கு பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதையும் மீறி, அந்த பெண்ணை திருமணம் செய்வதில் அனில் உறுதியாக இருந்தார். எனவே தனது பெற்றோர் மற்றும் உறவினர்களின் துணையுடன் அப்பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்த அவர், புறநகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்வது என முடிவெடுத்தார்.
அந்த பெண்ணும், வீட்டிலிருந்து கிளம்பி அந்த கோவிலுக்கு வந்து விட்டார். கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. திருமணத்திற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்த நிலையில், இந்த தகவலை எப்படியோ பெண் விட்டார் தெரிந்து கொண்டனர்.
உடனே அங்கு வந்த அவர்கள் மணமகனையும், அவரது உறவினர்களையும் கடுமையாக தாக்கினர். அந்த சண்டையில், மணமகனுக்கு கத்தி குத்தி விழுந்தது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அவரின் தந்தையும் கடுமையாக தாக்கப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.