கல்புர்கி கொலை செய்யப்பட்ட அதே பாணியில் கவுரி லங்கேஷ் கொலை?

புதன், 6 செப்டம்பர் 2017 (07:10 IST)
பெங்களூரில் பிரபல பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டு கொல்லப்பட்ட விவகாரம் கர்நாடகாவில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் கண்டன அலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்  பிரபல சித்தாந்தவாதி எம்எம் கல்புர்கி கொலை செய்யப்பட்ட அதே பாணியில் லங்கேஷ் பத்திரிகை ஆசிரியர் கெளரி லங்கேஷும் படுகொலை செய்யப்பட்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 
 
கடந்த சில மாதங்களாகவே ஒரு குறிப்பிட்ட மத அமைப்பினரின் மிரட்டலுக்குள்ளாகி வந்தவர் கவுரி, இதுகுறித்து போலீஸ் புகாரும் அளித்துள்ளதாக தெரிகிறது.
 
இவர் மீது தொடர்ந்து பல அவதூறு வழக்குகள் தாக்கல் செய்த பாஜகவினர் எப்படியாவது அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டிய நிலையில் தற்போது அவர் திடீரென கொலை செய்யப்பட்டுள்ளார். 
 
இந்த கொலையில் இதுவரை துப்பு துலங்கவில்லை என்றும் கவுரியை சுட்டு கொன்ற மர்ம நபர்கள் குறித்த அடையாளங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் போலீஸ் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்