அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியை நீக்கிய அரசு

வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (14:58 IST)
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியை  நீக்கியுள்ளது மத்திய அரசு. 
 
இந்த நிலையில்,  உலகளவில் முக்கியமான ஜி20   நாடுகளின் உச்சி மாநாடு டெல்லியில்  நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது.

இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட முக்கிய  உலகத்  தலைவர்கள் டெல்லிக்கு வருகை புரிந்து வருகின்றனர்.

உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த மாநாட்டிற்கு மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  மற்றும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியை  நீக்கியுள்ளது மத்திய அரசு. மேலும்,  பிரதமர் மோடி  - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பு நடைபெறவுள்ளதால், அமெரிக்கப் பொருட்கள் மீதான கூடுதல் வரியை இந்திய அரசு நீக்கீயுள்ளது.

அதன்படி, கொண்டக்கடலை, பருப்பு, ஆப்பிள், வால் நட், பாதாம் உள்ளிட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரி நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்