கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் பற்றி 4000 இ-மெயில்கள்: வருமான வரித்துறை ஆய்வு

செவ்வாய், 20 டிசம்பர் 2016 (15:19 IST)
கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் பற்றி ஒரே நாளில் 4000 இ-மெயில்கள் மத்திய அரசுக்கு குவிந்துள்ளன. இந்த இ-மெயில்கள் குறித்து வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.


 

 
கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் 500 மற்றும் 1000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்ற ரிசர்வ் வங்கி பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தியது.
 
இதையடுத்து நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுப்பட்டு கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களிடம் பறிமுதல் செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு மின்னஞ்சல் முகவரிக்கு, கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் குறித்து 4000 இ-மெயில்கள் குவிந்தன. இதுகுறித்து நிதி அமைச்சக அதிகாரி கூறியதாவது:-
 
கருப்பு பணம் பற்றி பொதுமக்களிடம் இருந்து 4000 இ-மெயில்கள் வந்துள்ளன. இது நல்ல வரவேற்பாகும். வருமான வரித்துறையினர் இந்த இ-மெயில்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அரசின் புலனாய்வு அமைப்புகள் மூலம் கருப்பு பணம் குறித்து பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 
 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்