உயருகிறது ரயில் கட்டணம் : பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்

வியாழன், 11 பிப்ரவரி 2016 (09:33 IST)
பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகிற பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வரலம் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
இந்த ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவி 23 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதில் ரயில்வே பட்ஜெட் 25ஆம் தேதியும், பொருளாதார ஆய்வறிக்கை பிப்ரவரி 26ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன் பின் பிப்ரவரி 29ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கலாகிறது.
 
இந்நிலையில், 7வது சம்பள கமிஷன் பரிந்துரை காரணமாகவும், சரக்கு மற்றும் பயணிகள் ரயில்களின் வருவாய் குறைவாக இருப்பதாலும், ரயில்வே துறைக்கு ரூ.32 ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஏற்படுகிறது.  எனவே ரயில் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்துவது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்