டெல்லியில், நிர்பயா என்ற பெண்ணை ஓடும் பேருந்தில் கற்பழித்து, சாலையில் வீசி சென்ற விவகாரம் நாட்டையே உலுக்கியது. ஆனாலும், டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவது அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது. முக்கியமாக குர்கான், நொய்டா ஆகிய பகுதிகளில் பாலியல் வன்முறைகள் அதிகமாக நிகழ்ந்து வருகிறது.