கணவரின் கண் முன்னே மனைவி கற்பழிப்பு - 8 பேர் கொண்ட கும்பல் அட்டூழியம்

திங்கள், 8 மே 2017 (12:08 IST)
கணவரை கட்டிப்போட்டுவிட்டு, அவரின் மனைவியை 8 பேர் கொண்ட கும்பல் கற்பழித்த விவகாரம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
ராஜஸ்தான் மாநிலம் தலான் நகரில் உள்ள கோகன் என்ற பகுதிய சேர்ந்த தம்பதி ஒன்று அவரையா என்ற இடத்தில் இருந்து, தனது வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது, அங்கு ஒரு வேன் வந்தது. தம்பதியினை சொந்த ஊரில் விட்டு விடுகிறேன் என லாரி டிரைவர் கூற அவர்கள் இருவரும் அந்த வேனில் ஏறிக்கொண்டார்கள்.
 
சிறிது தூரம் சென்றதும், 7 பேர்  அந்த வேனில் ஏறிக்கொண்டார்கள். அதன் பின் ஊரின் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் வேனை நிறுத்தி அந்த பெண்ணை கற்பழிக்க முயன்றனர். இதற்கு அப்பெண்ணின் கணவர் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவரை கயிற்றால் கட்டிப்போட்டு விட்டு, அந்த 8 பேரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பின் அந்த பெண் அணிந்திருந்த நகை, பணம், அவர்களிடமிருந்த பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு, நடுரோட்டில் அவர்களை இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
 
இதையடுத்து, கணவனும் மனைவியும் அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த 8 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை மருத்துவமனையிலும் சேர்த்தனர்.
 
இந்த விவகாரம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்