ஸ்மார்ட்போனால் கண்பார்வையை இழந்த இளம்பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (19:02 IST)
இருட்டில் அதிக நேரம் ஸ்மார்ட் போனை பயன்படுத்திய இளம் பெண் ஒருவரின் கண்பார்வை பறிபோனதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
ஸ்மார்ட் போன் என்பது தற்போது இன்றியமையாத ஒரு பொருள் ஆகிவிட்ட நிலையில் அதை அதிகமான நேரம் பயன்படுத்தினால் குறிப்பாக இருட்டில் பயன்படுத்தினால் கண் பார்வை போய்விடும் என ஏற்கனவே மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 
 
இந்த நிலையில் ஐதராபாத் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தினமும் நீண்ட நேரம் இரவில் இருட்டில் ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தி உள்ளதாக தெரிகிறது. தற்போது அவருடைய கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருடைய பார்வையை மீட்டெடுக்க தீவிர முயற்சி செய்து வருவதாகவும் டாக்டர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். 
 
கடந்த 18 மாதங்களாக அந்த இளம்பெண் ஸ்மார்ட்போனை இருட்டில் தொடர்ச்சியாக நீண்ட நேரம் பார்த்து உள்ளதாக தெரிகிறது. நீண்ட நேரம் இருட்டில் ஸ்மார்ட் ஃபோனை அதிக வெளிச்சத்துடன் பார்த்தால் கண் பார்வைக்கு ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்