திருமணத்திற்கு மறுத்த காதலன் : ஆணுறுப்பை அறுத்தெரிந்த காதலி....

சனி, 24 ஜூன் 2017 (11:27 IST)
தன்னை காதலித்துவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலனின் ஆணுறைப்பை அவரின் காதலி கத்தியால் அறுத்தெரிந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
டெல்லியின் மங்கோல்புரி பகுதியில் ரவி(35) என்ற வாலிபரும் 23 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் அருகருகே வசித்து வருபவர்கள் ஆவர். இதில் ரவி அந்த பெண்ணை காதலித்ததாக தெரிகிறது. ஆனால், அவரின் காதலை அவரின் பெற்றோர்கள் ஏற்காததால், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் முடிவிலிலிருந்து அவர் பின்வாங்கி விட்டதாக தெரிகிறது.
 
இந்நிலையில், இதுபற்றி விவாதிக்க கடந்த 21ம் தேதி இரவு 11.30 மணியளவில், அப்பெண்ணின் உறவினர்கள் ரவியை வீட்டிற்கு அழைத்துள்ளனர். எனவே, ரவியும் அங்கு சென்றுள்ளார். அப்போது, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அப்பெண், ரவியை வற்புறுத்தியுள்ளார். ஆனால், தனது பெற்றோர் சம்மதம் இல்லாமல் இந்த திருமணம் நடக்காது என ரவி கூறிவிட்டார்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பெண், ரவியை வலுக்கட்டயமாக குளியலறையில் பூட்டி வைத்தார். மேலும், சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியால் ரவியின் ஆணுறப்பை அறுத்து எரிந்துள்ளார். இதனால், அலறியபடி அந்த வீட்டை விட்டு ரவி ஓடியுள்ளார்.
 
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன் பின் ரவியை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்திற்கு அப்பெண்ணும் அவரின் குடும்பத்தினரும் தலைமறைவாகி விட்டனர். 
 
எனவே, அப்பெண்ணின் செய்கைக்கு உடைந்தையாக இருந்த அவரின் சகோதரர் மற்றும் அவரின் மனைவி ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்