பி.எட். 2 ஆண்டுகள் படிப்புக்கு இனி அனுமதி இல்லை! தேசிய ஆசிரியர் கவுன்சில் தகவல்..!

Mahendran

வியாழன், 11 ஜனவரி 2024 (13:38 IST)
பி.எட். இரண்டு ஆண்டுகள் படிப்புக்கு இனி அனுமதி இல்லை என தேசிய ஆசிரியர் கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.  
 
தற்போது  மூன்றாண்டுகள் இளநிலை படிப்பு  அல்லது முதுநிலை படித்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் பி.எட் படிக்கும் வசதி உள்ளது. சில கல்வி நிறுவனங்களில் நான்கு ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு திட்டம் நடைபெற உள்ள நிலையில்  பி ஏ படிப்புடன் சேர்த்து பிஎட் படிப்பையும் மேற்கொள்வார்கள். 
 
இந்த நிலையில் அடுத்த கல்வி ஆண்டு முதல்ம்  இரண்டு ஆண்டுகள் பிஎட் படிப்பு நடத்த கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது. இது குறித்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ள நிலையில் இனி அனைத்து கல்வி நிறுவனங்களும் 4 ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்பை மட்டுமே நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்