இலவச திட்டங்களை மூட்டை கட்டிய மத்திய அரசு

சனி, 6 நவம்பர் 2021 (10:48 IST)
நவம்பர் 30 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவச அரிசி மற்றும் கோதுமை கிடையாது என மத்திய அரசு அறிவிப்பு. 
 
கொரோனா காலத்தில் ஏழை மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. எனவே மத்திய அரசு பிரதமரின் க்ரீம் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் இலவச அரிசி மற்றும் கோதுமையை வழங்கி வந்தது. 
 
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த திட்டம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம், நவம்பர் 30 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவச அரிசி மற்றும் கோதுமை கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது ஏழை மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்