இலவச கேஸ் சிலிண்டர், லேப்டாப், மாடுகள்.. இன்னும் பல! – இலவசங்களை அள்ளி விட்ட பாஜக!

ஞாயிறு, 19 நவம்பர் 2023 (11:20 IST)
தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்துள்ளது.



தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் இந்த நவம்பரில் நடைபெறுகின்றன. இந்நிலையில் மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அவ்வாறாக தெலுங்கானாவிலும் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியில் உள்ள நிலையில் அங்கு பெரும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் தெலுங்கானாவில் தேர்தல் அறிக்கையில் பல்வேறு இலவசங்கள் மற்றும் திட்டங்களை அறிவித்துள்ளது பாஜக. ஆண்டு ஒன்றுக்கு 4 இலவச கேஸ் சிலிண்டர்கள், பட்ட படிப்பு படிக்கும் பெண்களுக்கு இலவச லேப்டாப், விவசாயிகளுக்கு இலவசமாக நாட்டு மாடுகள், விதை நெல் வகைகள், விவசாய கடனுதவி உள்ளிட்ட பல சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்த அறிவிப்புகள் தெலுங்கானாவில் பாஜகவிற்கு ஆட்சி வாய்ப்பை வழங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்