டெல்லியை ஆண்டு வரும் ஆம் ஆத்மி கட்சி ரகுராம் ராஜனை தங்கள் கட்சியில் சேருமாறு அழைத்ததாகவும், ராஜ்யசபாவில் எம்பி பதவி தருவதாக கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு ரகுராம் ராஜன், எனக்கு அரசியலில் நுழையும் எண்ணம் கிடையாது. பேராசிரியராகவே இருக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளாராம்.
மேலும், தேசியவாதம் குறித்து தனது கருத்தை வெளிபடுத்தியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஜனரஞ்சக தேசியவாதம் என்பது பொருளாதாரத்தை சீரழித்துவிடும். பிரிவினைவாதத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த வகை தேசியவாதம் பொருளாதாரத்தை பின்னோக்கி கொண்டு செல்லும்.