ஊரடங்கு முடிந்த சில நாட்களில் மகனுக்கு திருமணம்: முன்னாள் முதல்வர் திட்டம்

செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (08:00 IST)
ஊரடங்கு முடிந்த சில நாட்களில் மகனுக்கு திருமணம்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் 24ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வரும் 14ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே 15ஆம் தேதி முதல், நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி மகனின் திருமணம் ஏப்ரல் 17ஆம் தேதி நடத்த குமாரசாமி தரப்பினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து குமாரசாமி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய போது ’எனது மகன் நிகின் திருமணத்தை ஏப்ரல் 17ம் தேதி தனது ராம்நகர் இல்லத்தில் மிகவும் எளிமையாக நடத்த திட்டமிட்டிருக்கிறோம். இந்த திருமணத்தில் இரு வீட்டார் சார்பில் 15 முதல் 20 நபர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மிக எளிமையாக நடத்த இரு வீட்டாரும் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளோம். இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்தபிறகு பெங்களூரில் மிகப்பெரிய அளவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று குமாரசாமி கூறியுள்ளார்
 
கர்நாடக மாநிலம் தற்போது கொரோனா வைரசால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மகனின் திருமணத்தை முன்னாள் முதல்வர் நடத்துவது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவாகி வருகின்றது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்