ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம்பிரகாஷ் சவுதாலாவின் மனு டிஸ்மிஸ் - உச்ச நீதிமன்றம் அதிரடி

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (01:34 IST)
ஆசிரியர் நியமன முறைகேடு விவகாரத்தில், 10 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து, 
ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா தாக்கல் செய்த மனுவை டிஸ்மிஸ் செய்து உச்ச நீமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
இந்திய தேசிய லோக்தளம் கட்சியைச் சேர்ந்த ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம்பிரகாஷ் சவுதாலா, முதலமைச்சராக பதவி வகித்த போது, ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு செய்ததாக நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சவுதாலாவுக்கும், அவர் மகன் அஜய் சிங் சவுதாலாவுக்கும், தலா, 10 ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்தது.
 
இதை எதிர்த்து, சவுதாலா, அஜய் சிங் ஆகியோர் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் கலிபுல்லா, சிவ கீர்த்தி ஆகியோர் பெஞ்ச் முன்பு, விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த கோரிக்கையை சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். எனவே, இந்த மனுவை ஏற்க முடியாது. டிஸ்மிஸ் செய்யப்படுகிறது என உத்தரவிட்டுள்ளனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்