மும்பையில் உள்ள உயர் நடுத்தர மக்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தடுப்பூசி முகாம் என்று மோசடி செய்துள்ளது ஒரு கும்பல். அதுபோலவே கொல்கத்தாவிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக் வகை தடுப்பூசி போடப்படுவதாக சொல்லியுள்ளனர். இதை நம்பி பலரும் போட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் அதன் பின்னர்தான் போட்டுக்கொண்டவர்களுக்கு தலைவலி உள்ளிட்ட பல உபாதைகள் தெரியவந்துள்ளது. அவர்களும் வழக்கமாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் வரும் உபாதைதான் என நினைத்திருந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் போலிஸார் அந்த போலி முகாம் நடத்திய நபரைக் கைது செய்த பின்னர்தான் உண்மை தெரியவந்துள்ளது. இது சம்மந்தமாக சுகாதாரத்துறையினர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஏதேனும் உடல் நலப் பிரச்னை ஏற்பட்டால், மருத்துவ உதவி அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.