கேரளாவில் மீண்டும் ரயிலில் தீ! பற்றி எரிந்த பெட்டிகள்! – மர்ம ஆசாமிகள் கைவரிசையா?

வியாழன், 1 ஜூன் 2023 (09:13 IST)
கேரளாவில் சில வாரங்கள் முன்பு ரயில் பெட்டியில் மர்ம நபர் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஒரு ரயில் பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கேரள மாநிலத்தில் ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் செல்லும் எக்ஸிக்யூட்டிவ் ரயில் கண்ணூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, திடீரென அதன் பெட்டிகளில் ஒன்றில் புகை வெளியேறியுள்ளது. சிறிது நேரத்தில் பெட்டி தீப்பற்றி மளமளவென எரிய தொடங்கியுள்ளது. உடனடியாக அவ்விடம் விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்.

நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்ட நிலையில் ரயில் பெட்டி முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. ரயில் பெட்டிகளுடன் எஞ்சின் இணைக்கப்படாமல் இருந்ததால் பெட்டிகளில் மின் கசிவு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்கள் முன்னதாக மூடநம்பிக்கை காரணமாக ரயிலில் இருந்தவர்கள் மேல் பெட்ரோல் ஊற்றி நபர் ஒருவர் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்