ஜெயலலிதா உயிரின் விலை ரூ.750 கோடியா? டுவிட்டரில் வைரலாகும் அதிர்ச்சி செய்தி

செவ்வாய், 28 மார்ச் 2017 (22:39 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் மர்மமாக இருப்பதாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரணை செய்து ஜெயலலிதாவின் மரணத்திற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன



 


ஜெயலலிதாவின் மரணத்திற்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகிகளும், சசிகலா தரப்புமே காரணம் என தீபா மற்றும் ஓபிஎஸ் அணியினர் கூறி வருகின்றனர். அதேபோல் பொதுமக்களும் நடுநிலையாளர்களும் அப்பல்லோவில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை என்று ஆதங்கம் அடைந்தனர்.

இந்த நிலையில் அப்போலோ மருத்துவமனைக்கு 750 கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீடு செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்த தகவல் அப்பல்லோ மீது அதிருப்தி அடைந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா உயிரின் விலை ரூ.750 கோடியா? என டுவிட்டரில் ஒரு தனி ஹேஷ்டேக் தொடங்கப்பட்டு அதில் பல்வேறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்