உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு லைசன்ஸ் தேர்வு ரத்து?

செவ்வாய், 22 மார்ச் 2022 (10:41 IST)
உக்ரைனில் மருத்துவம் படித்த இறுதியாண்டு மாணவர்களுக்கு லைசன்ஸ் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
ரஷ்யாவுடனான போர் காரணமாக உக்ரைனின் சிக்கிய இந்தியர்கள் மத்திய அரசால் மீட்கப்பட்டனர் என்பதும் சுமார் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்ட நிலையில் அவர்களில் பலர் மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் கல்வி குறித்து விரைவில் முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. 
 
இந்நிலையில் உக்ரைனில் மருத்துவம் படித்த இறுதியாண்டு மாணவர்களுக்கு லைசன்ஸ் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு ரத்து குறித்து இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு உக்ரைன் நாட்டு பல்கலைக்கழகங்கள் தகவல் அளித்துள்ளன. 
 
3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான KROK-1 தேர்வை உக்ரைன் பல்கலைக்கழகங்கள் ஓராண்டு தள்ளி வைத்துள்ளன. 5 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான KROK-2 தேர்வை ரத்து செய்தும் உக்ரைன் பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இறுதியாண்டு KROK-2 தேர்வு எழுதாமலேயே மருத்துவ படிப்பிற்கான சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்