பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களில் மாணவ, மாணவிகளின் தந்தை பெயர் கட்டாயமாக பதிவு செய்யவேண்டும். இதுதொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி மனித வள மேம்பாட்டுத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதில், இன்று அதிகளவில் கணவன், மனைவி பிரிந்து வாழும் சூழல் உள்ளது. அம்மாவுடன் வாழும் குழந்தைகள் அதிகம் உள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் தந்தை பெயரை கட்டாயமாக குறிப்பிட வேண்டும் என்ற நிலை உள்ளது. இது குழந்தைகளுக்கு மன கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இதனால் தந்தை பெயர் குறிப்பிடுவதை விருப்பமாக மாற்ற வேண்டும், என்று எழுதியிருந்தார்.
இவரது இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார். இனி மாணவ, மாணவிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏறப் தாய் அல்லது தந்தை பெயரை குறிப்பிடலாம்.