குடிபோதையில் மகனை கொளுத்திய கொடூர தந்தை: பதபதைக்கும் தாய்!!

செவ்வாய், 19 ஜனவரி 2021 (08:29 IST)
ஐதராபாத்தில் குடிபோதையில் வந்த தந்தை 11 வ்யது மகனை படிக்கவில்லை என கொளுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள குஹட்பல்லி பகுதியை சேர்ந்தவர் பாலு . இவருக்கு 6 வகுப்பு படிக்கும் மகன் ஒருவன் உள்ளான். சம்பவ தினத்தன்று குடிபோதையில் வந்த பாலு தனது மகனிடம் பீடி வாங்கி தரும்படி கேட்டுள்ளான். 
 
பீடி வாங்கி வந்து கொடுத்துவிட்டு டிவி பார்க்க துவங்கிய மகனிடம் படிப்பத்தில்லை என கூறி அடித்துள்ளார். இதனை தடுக்க வந்த தாயையும் பாலி அடித்துள்ளார். ஒரு கட்டத்தில் கோபம் தலைக்கேறி மகன் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்தார். வலியில் துடித்த மகனை கண்டு தாய் கதறியுள்ளார். 
 
சிறுவன் சரண் 60% தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து  தந்தை பாலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்