தனக்காக உயிரை விட்ட ரசிகர் : நேரில் சென்று ஆறுதல் சொன்ன பவர் ஸ்டார் (வீடியோ)

வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (08:45 IST)
தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபல நாயகனாக இருப்பவர், பவர் ஸ்டார் என அழைக்கப்படும் பவன் கல்யாண்.


 


இவர், தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி ஆவார். பவன் கல்யாணுக்கு ரசிகர் கூட்டம் அதிகம். இந்நிலையில் திருப்பதியை சேர்ந்த அவரது ரசிகர் வினோத் குமார் (24)   என்பவர், கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டதில் நடைபெற்ற உடல் உறுப்பு தான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அந்நிகழ்ச்சியில், அவர் “பவர் ஸ்டார் வாழ்க” என கோஷம் எழுப்பி உள்ளார். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத மற்றொரு தெலுங்கு நடிகரான ஜுனியர் என்.டி.ஆரின் ரசிகர் அக்ஷய் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து, அவர்கள் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு என்.டி.ஆரின் ரசிகர் அக்ஷய், பவன் கல்யாண் ரசிகர் வினோத்தை குத்திக் கொலை செய்தார்.

இந்த கொடூர சம்பவத்தை கேட்டு, நடிகர் பவன் கல்யாண் அதிர்ச்சியடைந்து, கொல்லப்பட்ட ரசிகரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மரணமடைந்த வினோத் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் தீவிரமாக செயல்படும் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ:

வெப்துனியாவைப் படிக்கவும்