திருப்பதி கோயில் பெயரில் போலி இணையதளம்

வியாழன், 23 ஜூலை 2015 (01:26 IST)
திருப்பதி வெங்கடாசலபதி சுவாமியை தரிசனம் செய்ய போலி இணையதளம் செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
 

 
இந்தியாவில், ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவ தலம் திருப்பதி. இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் ஒன்று இது. திருப்பதி வெங்கடாசலபதி சுவாமியை தரிசனம் செய்ய தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
 
இத்தலம் வைஷ்ணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது.
 
இந்த நிலையில், திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து. சுவாமியை தரிசனம் செய்யும் வகையில் திருப்பதி திருமலை தேவஸ்தானம் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.
 
இந்நிலையில், திருப்பதிக்கு வந்த சென்னை பக்தர் ஒருவரிடம், போலி இணையதள டிக்கெட் இருந்ததை கண்டு தேவஸ்தான நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு, அந்த டிக்கெட்டை கைப்பற்றி தீவிர விசரணை நடத்தினர். அப்போது. templeyatri.com என்ற போலியான இணையதளத்தில் டிக்கெட்டு முன்பதிவு செய்துள்ளது தெரிய வந்ததது.
 
மேலும், இந்த விவகாரம் குறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்