#ResignModi ஹேஷ்டேக் பதிவை தூக்கிய பேஸ்புக்! – தவறுதலாக நடந்ததாக விளக்கம்!

வியாழன், 29 ஏப்ரல் 2021 (11:49 IST)
கொரோனா நடவடிக்கைகள் குறித்து பேஸ்புக்கில் பலர் #ResignModi என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்த நிலையில் அவற்றை பேஸ்புக் நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களாக பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகியவை உள்ளன. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை என பலர் பேஸ்புக்கில் #ResignModi என்ற ஹேஷ்டேகை குறிப்பிட்டு பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் அந்த பதிவுகள் பேஸ்புக் விதிகளுக்கு அப்பாற்பட்டு உள்ளதாக நீக்கப்பட்டுள்ளது. இதே ஹேஷ்டேக் ட்விட்டரில் நீக்கப்படவில்லை. இந்த சம்பவம் சர்ச்சையான நிலையில் தவறுதலாக அந்த ஹேஷ்டேக் பதிவுகள் நீக்கப்பட்டதாக பேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்