அதிக லக்கேஜுகள் கொண்டு சென்றால் கூடுதல் கட்டணம்! – ரயில்வே அறிவிப்பு!

வெள்ளி, 3 ஜூன் 2022 (09:02 IST)
ரயில்களில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உடைமைகள் எடுத்து சென்றால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனாவால் இந்தியா முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் ரயில் சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. ஆனால் கொரோனா காலத்தில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி தற்போது ரயில்களில் பயணிகள் கொண்டு செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் விதிக்க முடிவெடுத்துள்ளது. ரயில்வே நிர்வாக அறிவிப்பின்படி, ஏசி முதல் வகுப்பில் 70 கிலோ, ஏசி2 படுக்கை மற்றும் முதல் வகுப்பில் 50 கிலோ, ஏசி3 படுக்கை மற்றும் இருக்கை பெட்டிகளில் 40 கிலோ, இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 40 கிலோ அளவிலான லக்கேஜுகள் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள அளவிற்கு கூடுதலாக லக்கேஜ் எடுத்து சென்றால் அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்