நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவுக்குப் பின்னர் தேசிய ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது எக்சிட்போல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. தேர்தல் முடிந்த சில நிமிடங்களிலேயே டைம்ஸ் நவ் ஊடகம் தங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது பாஜக அணி- 306 இடங்களையும் காங்கிரஸ் அணி- 132 இடங்களையும் இதர கட்சிகள் 132 இடங்களையும் பிடிக்கும் என அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜகவே அடுத்து ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்துள்ளன.
இதனால் மோடியே பிரதமர் ஆவார் என்ற எண்ணம் எழுந்துள்ளது. இதனால் மோடிக்கு நெருக்கமாக உள்ள அதானி மற்றும் அம்பானி ஆகிய கார்ப்பரேட் முதலாளிகளின் நிறுவனங்களின் பங்குகள் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன. கருத்துக்கணிப்புகளுக்கு அடுத்த தினங்களில் மட்டும் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கிடைத்த லாபம் மட்டும் லட்சக்கணக்கான கோடிகள் என்கின்றன