தாஜ்மகாலுக்கு தொடரும் ஆபத்து; சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கை

செவ்வாய், 6 ஜூன் 2017 (18:37 IST)
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமாகி வருவதால் தாஜ்மகால் உள்ளிட்ட பல வரலாற்று சின்னங்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருவதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


 

 
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் தாஜ்மகால் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சின்னங்கள் உள்ளன. ஆக்ராவில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக வரலாற்றுச் சின்னங்கள் பாதிகப்படுகின்றன. அதுவும் குறிப்பாக தாஜ்மகால் மிகவும் பாதிக்கப்பட்டுகிறது.
 
பளிங்கு கற்களால் கட்டப்பட்ட தாஜ்மகால் மீது மாசு படலம் படிந்து கற்கள் மஞ்சல் நிறத்துக்கு மாறியது. 23 ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றம் தாஜ்மகாலை பாதுகாக்க பல்வேறு விதிமுறைகளை கொண்ட உத்தரவை பிறப்பித்தது.
 
அதில் முக்கியமான ஒன்று ஆக்ராவில் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் தொழிற்சாலைகள் அங்கிருந்து அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் எல்லா தொழிற்சாலைகளும் அகற்றப்படவில்லை. இதனால் தொடர்ந்து சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.
 
இதனால் தாஜ்மகாலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்