அவரின் மீதான வழக்கைத் தற்போது சி பி ஐ விசாரித்து வருகிறது. மேலும் லண்டலிலும் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு நடைபெற்று வருகிறது. அவரது 13,900 கோடி சொத்துகளையும் அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு வரமறுக்கும் அவரை தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளி என அறிவிக்க வேண்டுமென அமலாக்கப் பிரிவு மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கில் அவர் சார்பாக அவரது வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில்’ கடந்த காலங்களில் நான் கடன்களை அடைக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டேன். ஆனால அதற்கான அமலாக்கப் பிரிவு அதற்கான வேலைகளை ஆயத்தப்படுத்தவில்லை. அதுமட்டுமல்லாமல் என்னை தலைமறைவு குற்றவாளி என்று சொல்வதை ஏற்கமாட்டேன். பிரிட்டிஷ் நீதிமன்றத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். இந்தியாவிற்கு வருவதற்கு மறுப்பேதும் சொல்லவில்லை. இது குறித்த லண்டன் நீதிமன்றத்தின் தீர்ப்பு டிசம்ப்பர் 10 அன்று வெளியாகிறது’ என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.