மேற்குவங்கத்தில்தான் எமர்ஜென்ஸி: மம்தாவுக்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர்

புதன், 26 ஜூன் 2019 (08:08 IST)
மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி மூன்றாம் அணி உதவியுடன் பிரதமர் நாற்காலியை பிடித்துவிட வேண்டும் என்ற மம்தா பானர்ஜி தீவிர முயற்சி செய்த நிலையில் அது நடக்காமல் போகவே பெரும் ஏமாற்றத்துடன் உள்ளார். ஆனாலும் அவர் பாஜக ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்வதை விடவில்லை.
 
சமீபத்தில் பேட்டி அளித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியா சூப்பர் எமர்ஜென்சியில் இருந்துவருவதாக தெரிவித்தார். அவருடைய இந்த கருத்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்த கருத்துக்கு பதிலடி தரும் வகையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்  கூறியபோது, மேற்கு வங்கத்தில் தற்போது நடக்கும் மம்தாவின் ஆட்சி, இந்திரா காந்தி கால எமர்ஜென்சிக்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்ல என விமர்சித்துள்ளார்.
 
கடந்த 1975 ஆண்டு ஜூன் 25ஆம் தேதி இந்திரா காந்தி எமர்ஜென்ஸியை அறிவித்தார். இந்தியாவில் எமர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் அந்த எமர்ஜென்ஸி குறித்து இரு தலைவர்களும் விமர்சனம் செய்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்