உ.பி தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு!

வியாழன், 10 பிப்ரவரி 2022 (15:49 IST)
உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு அங்குள்ள 11 மாவட்டங்களில் இன்று காலை முதல் நடந்து வருகிறது. 

 
மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 58 தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் இன்று வாக்குரிமை செலுத்தி வருகின்றனர். இன்று வாக்குப் பதிவு நடக்கும் தொகுதிகளில் சில, இந்திய தலைநகர் டெல்லியை இணைக்கும் கடைசி எல்லை மாவட்டங்களில் உள்ளன.
 
பகல் 1 மணி நிலவரப்படி, 35.03% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையில்,பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்த புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது குறித்து தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், "இயந்திரங்களில் கோளாறுகள் தொடர்பான புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சட்டம்-ஒழுங்கு கடைபிடிக்கப்படுகிறது. வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. ஆக்ராவில் வாக்கு செலுத்த வந்த ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டதாக எழுந்த புகார் ஆதாரமற்றது என கண்டறியப்பட்டது" என உ.பி மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்