மின்சார வாகனங்களுக்கு வரி குறைப்பு.. பெட்ரோல், டீசல் என்ன ஆச்சு?

புதன், 1 பிப்ரவரி 2023 (13:01 IST)
மின்சார வாகனங்களுக்கு வரி குறைப்பு.. பெட்ரோல், டீசல் என்ன ஆச்சு?
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் மின்சார வாகனங்களுக்கான வரி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே மின்சார வாகனங்களுக்கான வரிகள் குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். 
 
மின்சார வாகன பயன்பாட்டை நாட்டில் அதிகப்படுத்தும் வகையில் மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் மீதான வரி 13 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் மீது 21 சதவீதம் இருந்தது என்பதும் தற்போது 8% வரி குறைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் மின்சார வாகனத்தை அதிகம் வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
மேலும் பட்ஜெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று பெட்ரோல் டீசல் காண வரி குறைப்பு குறித்து அறிவிப்பு இருக்கும் என்பதுதான். ஆனால் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் விலை குறித்து ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை என்பது பொதுமக்களுக்கு மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்