தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்: சுனில் அரோரா

வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (16:43 IST)
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வருவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சற்று முன்னர் தெரிவித்துள்ளார் 
 
தமிழகம் புதுச்சேரி கேரளா மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பை இன்னும் சில நொடிகளில் சுனில் அரோரா அவர்கள் வெளியிட உள்ளார் 
 
இதனை அடுத்து இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் என்று அவர் தெரிவித்துள்ளார். கொரோனா காலம் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் சுமூகமாக நடத்துவதில் மருத்துவர்கள் செவிலியர்கள் அதிகாரிகளுக்கும் பெரும் பங்கு உள்ளது என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் தேர்தல் விதிகள் நடத்தி வந்ததாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்