வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? தலைமை தேர்தல் ஆணையர் தகவல்..!

Mahendran

வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (18:20 IST)
வயநாடு தொகுதிக்கு  இடைத்தேர்தல் எப்போது? என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர்  ராஜீவ் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
 
கேரள மாநிலம் வயநாட்டில் இயற்கை பேரிடர் காரணமாக தற்போது இடைத்தேர்தல் நடத்த முடியாது என்றும், உரிய நேரத்திற்குள் வயநாடு மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என  தேர்தல் ஆணையர்  ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக வயநாடு தொகுதியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். ஆனால் அவர் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் வெற்றி பெற்றதால், வயநாடு தொகுதி பதவியை ராஜினாமா செய்தார். ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால், வயநாடு மக்களவை தொகுதி தற்போது காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
வயநாடு தொகுதிக்கு உட்பட்ட மூன்று மலை கிராமங்களில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பெரும் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளதால் தற்போது அங்கு தேர்தல் நடத்தும் சூழ்நிலை இல்லை என்றும் இயல்பு நிலை திரும்பிய பிறகு தான் வயநாடு தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்