65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தபால் ஓட்டா ? தேர்தல் ஆணையம் வாபஸ்!

வெள்ளி, 17 ஜூலை 2020 (14:06 IST)
65 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தபால் வாக்கு அளிக்க தகுதியானவர்கள் என்ற மத்திய அரசின் சட்டத்திருத்ததுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

மத்திய அரசு தேர்தல் நடத்தும் முறையில் சில மாற்றங்களை கொண்டுவர எண்ணி 65 வயது நிரம்பியவர்களை மூத்த குடிமக்கள் என அறிவித்து அவர்கள் அனைவரும் தபால் வாக்கு அளிக்க தகுதியானவர்கள் என்று அறிவித்தது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. இதன் மூலம் தேர்தலில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது.

அதனால் இப்போது தேர்தல் ஆணையம் வர இருக்கும் பீஹார் மாநில தேர்தலில் இந்த சட்டத்திருத்தத்தை வாபஸ் பெற்றுள்ளது. தபால் வாக்குகளை எடுத்து செல்லுதல் உள்ளிட்ட நடைமுறை பிரச்சனைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்