அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 3.5 ஆக பதிவு

புதன், 29 ஏப்ரல் 2015 (13:42 IST)
அசாம் மாநிலத்தில் நள்ளிரவு 1 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவு கோளில் 3.5 ஆக பதிவானதாக அம்மாநில வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
இந்த நிலநடுக்கம் சோண்டிபூர் மாவட்டத்தில் மையம் கொண்டிருந்ததாகவும், இந்த நிலஅதிர்வால் எந்த வித உயிர்ச்தேமும் பொருட்சேதமும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த 25 ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அந்த நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அசாம் தலைநகர் குவாஹாட்டியில் தொடர்ந்து இரண்டு முறை நில அதிர்வு ஏற்பட்டது.

இந்நிலையில், அசாம் மாநிலத்தில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.
 
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000 ஐ தாண்டியுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்