ரூம் போட்டு யோசிப்பாங்களோ; பாலியல் குற்றத்தில் சிக்கினால் டிரைவிங் லைசென்ஸ் ரத்து

வெள்ளி, 13 ஜூலை 2018 (16:26 IST)
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்களுக்கு வாகன உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

 
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக வடமாநிலங்களில் அதிக அளவில் உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அதாவது, பாலியல் குற்றங்களில் ஈடுபவர்களுக்கு அவர்களது வாகன உரிமம், ஓய்வூதியம் ஆகியவை ரத்து செயப்படும் என்று அறிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்த சட்டம் வரும் ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்